சோழிகள் உருளும்
ஜதி
மின்னல் பூக்கும் ஒளி
சிரிக்கவில்லை
சிறுகச் சிறுக
சிதைக்கிறாள் என்னை. . .
இரசவாத உண்மை
உன்
மாதுள மணி நிற உதடுகளுக்கு
பின்
ஒளி(ர்)ந்து விளையாடுகிறது. . .
திமிர்
பிடித்தவள் என்கிறாள்
உன்
தோழி
யாருக்கு
தான் இவளை பிடிக்காது?!
பாவம்
"திமிர்"
என்கிறேன்
வெகுளியாக. . .
2 comments:
Arumi
Post a Comment