Monday 29 September 2008


அன்பு,
ஒரு அடிமைத்தனம் தான். . . 
ஆனால், 
விடுதலை. . .இங்கு மட்டும் , 
வெறுக்கப்படுகிறது. . .

Friday 26 September 2008

இறப்பதற்காக. . .

(நண்பனின் "பந்தம்" என்ற கவிதை கண்டு. . . என் உதற்றல்கள்)

அலங்கார தேவியே,

வணிதாவனி. . .

அன்பனை கவிபாட,

அருள்வாய் இனி. . .

. . .

உள்ளத்தின் உதிரத்தை ஒன்றாக்கி,

உயிர் தந்தாய். . .

உயிருக்கு

"பந்தம்"என்றொரு பெயரும் தந்தாய். . .

எழுதிய ஒரு கவிதையில்,

என்னைச் சாகடித்தாய். . .


எத்தனை முறை சாவேன் ?

எத்தனை முறையும் சாவேன். . .

ஏழு சென்மமும் சாவேன் . . .

பிறப்பதையே தொழிலாக்கிவிட்டேன்,

உன் கவி படித்து,

இறப்பதற்காக. . .


தேவதைகளே !

தேடலை நிருத்துங்கள். . .

உங்கள் அமரத்தன்மையின்,

அமிர்தம். . .

என் நண்பனின்

காலடியில். . .

-கண்ணப்பன்செந்தில்

Saturday 20 September 2008

               இயலாமை. . .

வினாத்தாள் கொடுத்து,
வெகுநேரம் ஆகிவிட்டது. . .
வெறிச்சோடி கிடக்கிறது,
விடைத்தாள். . .

Thursday 11 September 2008

திழைத்தேன். . .


அன்று ஒரு இரவு,
மீண்டது . . .
நண்பனின் உறவு.

முரண்பட்டது. . .என் மீது,
திறன் கொண்டவனின்,
முரண்பாடுகள். . .

விண்ணோடு விளையாட
விளைந்த,
காகிதக் குவியல்கள். . .
கண்ணிமைக்கும் பொழுதில்,
கடுகுத் தீயில்,
காற்றாய்,
கரியாய்,
கருத்திழந்த கதை போல. . .

நண்பனிடம். . .
இல்லை...இல்லை...
நட்பிடம்,
நான் கொண்ட. . .சினமெல்லாம்,
சின்னா பின்னமாய்,
சிதறிப்போனது. . .

வேசம் கொண்ட வெறுப்பெல்லாம்,
நாசமாய் போனது,
நேசமாய் ஆனது. . .

திழைத்தேன் என்னில். . .
பிழைத்தேன் மண்ணில். . .

ஏகாந்தம் கொண்டாடும்,
"ஏகனே ". . .

ஒன்றில் உண்டு. . .
ஆயரம் கோடியில் ,
அடங்காத தசமங்கள். . .
என்னில் நீ. .யும் அப்படித்தானடா. . .

எப்படிச் சொல்வேன். . .இதை,
என்னைப் பெற்றெடுத்த,
முத்தமிழில் ? ? ?

"உறக்கத்தில் "
உளறினாலும், உண்மையைச் சொல்வேன். . .
"தள்ளாத" நிலையுலும் ,
தளராத வார்த்தை கொள்வேன். . .

காரணம்,
எழுத்து என்கிற மதத்தில். . .
கண்ணதாசனை,
கடவுளாக கொண்டவன் நான். . .

உணர்வுகளின் வெளிப்பாடே,
எங்கள் மதத்தின்,
உயிரோட்டம். . .

வேண்டுவதை தந்திடும்,
வேதத்தின் நாயகா. . .
வேண்டுவது உன்னிடம்,

"வேண்டாம் "
வேண்டாம். . .இனி,
இந்தச் சந்திர சாகசம்,
எங்கள் நட்பில். . .

இனி. . .என்றும்,
எட்டுத்திக்கும் விட்டெரிக்கும்,
இளஞ் சூரியனாய்,
சுடரட்டும். . .

பரிதிஇன் நிழலில். . .
-கண்ணப்பன்செந்தில்

Wednesday 10 September 2008

ஆரிடம் அழுவேன். . .



பனி தழுவும் ரோஜா,
பாலை முள்ளாய் ஆகுமோ ?
ஆனதே என் கல்வி. . .
ஆரிடம் அழுவேன் ? ? ?
அறிவு தாருங்கள் என்று. . .

ஏன் தங்கத்திற்கு அதிகம் விலை?


தொடரும் தூறல் காலத்தில். . .
ஒரு பகல் ,
பதினோறு மணிக்கு. . .
உழவர் தலைவன் ஊரினை பார்த்தான். . .
என்னில் எழுந்தது, , ,
கேள்வி. . .
ஏன் தங்கத்திற்கு அதிகம் விலை?
நான் நிரந்திரமானவன். . . அழிவதில்லை,
எந்த நிலையுலும். . .எனக்கு மரணமில்லை.
-கண்ணதாசன்
நான் அவனின் தாசன் . . .