Saturday 11 December 2010

பூக்கள் மட்டும் அல்ல. . .

Add Image




பழுப்பு வெள்ளை
பட்டு ஜரிகை. . .

'8'-ஆன இடுப்பை எடுத்துக் காட்டும்
சேலை மடிப்பு. . .

எவரையும் வீழ்த்தும்
விழி எனும் கனைக்கு
வில்லான புருவங்கள். . .

இருளின் வண்ணம் எதுவென கேட்டால்
இது தான் என எடுத்துஇயம்பும்,
நெய் பூசிய கூந்தல். . .

நித்தமும் நிலைகுலையச் செய்யும்
விந்தையான கவர்ச்சி. . .


இப்படி இறகுகள் ஏராளம் கொண்ட
வண்ணமயமான பறவைகளின் கூட்டம்
காருன்யாவில்,
திருவோனக் கோலமிடுவதை கண்டேன். . .
உதிர்ந்தது பூக்கள் மட்டும் அல்ல. . .
நாங்களும் தான். . .


Tuesday 30 November 2010

இன்னும் எத்தனை இரவுகள். . ?

இன்னும் எத்தனை இரவுகள். . ?
என் விழிகளில்,
விழக்குகள் எரிந்து கொண்டிருக்கும். . .
மின்சாரத்தை மிச்ச படுத்த விரும்புகிறேன். . .
அது,
என் தேசத்திற்கும்,தேகத்திற்கும்,
தற்போதைய தேவை. . .

Friday 12 November 2010

நீ எங்கு இருக்கிறாய் ?




காற்றும் என்னைச் சாடுகிறது,

காலம் என்னை தூற்றுகிறது

ஏன் எங்களை இழுத்தடிக்கிறாய் என்று. . .

இயற்கையே. . ! இப்படி பழிக்கிறது

இதில்,

நண்பர்களிடத்தில் நான் எப்படி குறை காண்பது. . ?

காரணம். . ? சொல்லபடுகிறது

காலத்தில் எனக்கு

காதல் வரவில்லையாம். . .

நகைக்கிறேன்,

மீண்டும் நகைக்கிறேன். . .

தனிமையின் தாராளம்

என்னைச் சூழும் தருணங்களில்

காற்றும் என்னைச் சாடுகிறது,

காலம் என்னை தூற்றுகிறது. . .


நீ எங்கு இருக்கிறாய் ?

மழையின் சாரல்,

தென்றலின் தழுவல்,

இலைகளின் நிறம்

இவைகள், நீ இன்றி

உணர்வு தர மறுக்கின்றன. . .



உன் கண்களை மறைக்கும்,

முகப்பு கூந்தலை தளர்த்தி

முத்தம் கொடுக்க,

என் உதடுகள் தவம் கிடக்கிறது. . .

உன் கைபிடித்து

நான் நடக்கும் தருனங்களுக்காக

என் கற்பனை பூங்காக்களில், மரங்கள்

மகரந்த பூக்களை உதிர்க்காமல் காத்திருக்கிறது. . .

நீ எங்கு இருக்கிறாய் ?

தெரியாது

நீ எப்படி இருப்பாய் ?

சத்தியமாக தெரியாது. . .

ஆனால் !

உன்னை நம்புகிறேன். . .

நீ எனக்கான இறைவனின் கருணை. . .

காற்றை பாடவை,

காலத்தை போற்றவை. . .

- கண்ணப்பன்

Saturday 6 November 2010

விருப்பத்திற்கு உவமை முகில் என்று. . .


கருக்கும் முகிலிடம்

கடன் கேட்டேன்,

வெறுக்கும் மனதினை. . .

அன்பு கொண்ட முகில்

அழுதது. . .

Monday 1 November 2010

குஸ்த்தி. . .


குழந்தையின் தோழமைத் தனம்,
கொண்டாட்டம். . .
தோழமையில் குழந்தைத் தனம்,
திண்டாட்டம். . !

Thursday 12 August 2010

ஏக்கம் நிறைந்த காலம். . .


ஏக்கம் நிறைந்த காலம்,
தூக்கம் வராத கோலம். . .

எதோ ஒரு விதமான இறுக்கம்,
காரணம் தேடினால்,
கவிதையும்,கண்ணீரும் கலைகட்டுகிறது. . .
சோகமும் ,மோகமும் சூடுபிடிக்கிறது. . .
காதல் என்று யாரும் கதை சொல்லிவிட வேண்டாம். . .
அதற்க்கு தருணம் தற்போது இல்லை. . .
இது,
எதிர்காலத்தின் எதிர்பார்ப்பு,
நிகழ்காலத்தின் நேரக்களிப்பு. . .

வாய்ப்புகளுக்காக,
வானம் பார்த்திருக்கிறேன். . .
கால்கள் இரண்டிற்கும்,
காவடிச் சிந்து தெரிந்திருந்தும். . !

அழுத்தத்தை போக்கவே, என்னத்தை
எழுத்தாக்குகிறேன். . .
கவிஞன் என்ற கவுரம் காண அல்ல. . .

மாற்றத்தை எதிர்பார்த்திருக்கிறேன். . .
மாயோன் மருகன்,
மனமிரங்கும் திசை பார்த்திருக்கிறேன். . .

ஏக்கம் நிரந்த காலம்,
தூக்கம் வராத கோலம். . .

Monday 28 June 2010

கார்த்தி'கை'யில் தீபம். . .



கார்த்திகைக்கும் தீபத்திற்கும்,
காலம் தொட்ட,
கலாச்சார உறவு உண்டு
அந்த உறவின் தன்மை
ஒளிமயமானது. . .
பார்ப்பவர்களை லயிக்கச் செய்கிறது. . .
-------------
தீபம்,
எத்தனை மாதங்கள் ஒளிர்ந்தாலும்,
உன்னதம் என்னவோ கார்த்திகையில் தானே. . .

தீபம் இல்லாத கார்த்திகை ....?
"பத்தோடு ரெண்டு. . .
பன்னெண்டு" ஆகியிருக்கும். . .
-------------
தீபம் கண்களை கவர்கிறது,
கார்த்திகை இதையத்தை ஈர்க்கிறது. . .
பார்வையும், எண்ணமும். . .
நேர்கோட்டில் இணையும் தருணத்தில்,
அற்புதமான பயணம் தொடங்குகிறது. . .

அந்த பயணம்
மான்களும் மலர்களும் சூழ்ந்த,
பசுமைப் பள்ளத்தாக்கில் தொடர்கிறது. . .
ஆஹா. . ! என்ன ரம்யமான காட்சி !

கற்பனை ஓவியமயமானது. . .
அதற்குத் தெரியவில்லை,
"பாவம்-கார்த்திகை, அதற்க்கு 29 நாட்கள் தான்"
என்று. . .

இவ்வாறு எதிர்படும் எண்ணங்களை
எழுத்தாக்க,
வார்த்தைகளைத் தேடி
வானம் பார்த்திருந்த வேளையில்,
இப்படி ஒரு வாசகம் சிக்கியது. . .

"டேய் கண்ணப்பா ! பொழப்ப பாருடா". . .

Sunday 20 June 2010

Sun not getting down. . .


The evenings are not rose to someone. . .

But the time is 9:00 PM. . ?

May be they are in Amazing world. . !

I would like to see soon. . .

I would like to scale soon. . .

THE AMAZING,

Through my sharp "kids".

Tuesday 15 June 2010

சதீஷ். . .


சமுதாயச் சுழலின் ஆதிக்கத்திற்காக,
தன் "குழந்தைத்" தன்மைகளை
மாற்ற முயற்ச்சிக்கும், மானுடம்.
முயற்ச்சிகளின் முடிவில் தோல்வியுற்று,
எங்களை வென்றுவிட்டான் - நட்பினில். . .

கதையில் பார்த்த கர்ணனை,
காருண்யாவில் காட்டியவன். . .
நடப்பு வட்டத்திற்கு,
டீயும், புகையும் தருவதற்காக
அண்ணாச்சி கடை,
இவனை குத்தகைக்கு ஏற்றிருந்தது. . .(அது ஒரு வசந்த காலம்)
. . .
இவன்,
தட்வெட்ப மாறுதலுக்காக, மாறும்
மரங்கள் சூழ்ந்த வனத்தில். . .
தரம் மாறாத ஸ்தல விருட்சகத்தின் *பிரதான பாகம்*. . .

அன்புள்ள சதீஷ். . .
உயர்ந்து வாழ்வான்,
ஓவியமாய் பிறந்த ஒரு மகன்
என்ற,
உன் பெற்றோர்களின் கனவுகளுக்கு. . .
வண்ணம் தீட்ட , வாழ்த்துக்கள். . .
-கண்ணப்பன்
*{பிரதான பாகங்கள். . .ஒன்று மட்டும் அல்ல. . .}*

Friday 11 June 2010

ஆங்கிலத்தில் கவிதை. . .


ஆங்கிலத்தில் கவிதைகள். . .
அநேகம்பேர் ஆலாபனை செய்வார்கள்,
சிலாகிப்பார்கள். . .
அப்படி ஒன்றும் இதுவரை நேர்ந்தது இல்லை எனக்கு. . .
காரணம்,
ஆங்கிலத்தில் சிந்திக்க இதுவரை கற்றுக் கொள்ளவில்லை. . .

சமீபத்தில் என் நண்பன் அனுப்பிய குறுஞ்செய்தி,
ஆங்கிலம்! ஆனால் என்னை எதோ நெகிழச் செய்தது,
அவன் கடந்தகால நிகழ்வுகள். . .காரணமாக இருக்கலாம். . .
அது கவிதையா என்றுகூட தெரியவில்லை. . .
நான் அதை கவிதையாக உணர்ந்தேன். . .

Was a day wen i got my degree
after so many puzzles,
wen i got my offer letter
after too many trials,
a reebok shoe? 1st day office?
can it b her comin back?
happiness???
but wat happend today is makin me mad...sleepless...
where r d words??
Damn bike'Its jus crazy.
Incomparable!!
i feel "MY OWN MINE" :-)
-felix