Thursday, 24 September 2009

நண்பர் நற்ரமிழனுக்கு. . .

நண்பர் நற்ரமிழனுக்கு. . .லிங்கத்திற்கு 30 க்கும் மேற்பட்ட விழக்கங்கள் கொடுக்க பட்டுள்ளன. . .அதில் இரெண்டு (என்று நினைகிறேன்)பெண் ஆண் சம்பத்தப்படுத்தி உருவாக்க பட்டவை. . .அதாவது லிங்கம் ஆணின் ப்ரிதிபளிப்பகவும். . .கிளே உள்ள ஆவுடை பெண்ணின் ப்ரிதிபளிப்பகவும் உருவாக்க பட்டுள்ளதாகவும் அர்த்தங்கள் புரியப்பட்டது. . .இதற்க்கு பின் இந்த முறையை வெறுத்தவர்கள் அல்லது உடன்பாடுகள் இல்லாதவர்கள். . .அவற்றை கமாத்தின் வார்த்தைகளை வெகுவாக செருமி. . .co-incident ஆவதாக விரவி விட. . .இன்றளவும் அத்தகைய எண்ணம் கொண்டோர்(உடன்பாடு இல்லாதவர்கள்)அதை வழிமொழிகின்றனர் . . .

குழந்தை தாயின் மார்பகத்தின் முகடுகளில் தன் பால் மனம் மாறாத வாய் வைத்து. . .உலகில் புனிதமான அந்த அமுதத்தை அருந்துகிறது. . .இந்த காட்சியை நான் ஒரு குழந்தையாகவோ அல்லது தாயின் மனநிலையில் தான் பார்கிறேன். . .பார்க்கிறோம். . .இதை வேறுவிதமாக விளக்கம் தருபவர்களை பார்த்தால் எனக்கு கோவம் வருவது. . . நியாயம் என்றே நினைக்குறேன். . .ஆனால் மார்பகங்கள் . . .மார்பகங்கள் தான். . .அவர்கள் பார்வை வேறு விதமாக இருக்கிறது. . .அது அவர்கள் விருப்பம். . .அதை அவர்களை போன்ற ஒத்த மனம் கொண்டவர்களுடன் பகிர்ந்துகொள்ளட்டும். . .அந்த பாலை அருந்திய பிள்ளையிடம் வந்து சொன்னால். . .அல்லது உங்க குடும்பதுள்ள (இப்படி விளக்கம் தந்த உடன்பாடு இல்லாத முன்னோர்கள்) தான் இப்படி சொல்லிருக்காங்க அப்படின்னு சொன்னால்? அந்த மனம் என்ன வேதனையை அடையுமோ ?அந்த வேதனையை நாம் அடைகிறோம். . .இங்கு மார்பக உவமை இறைவனின் உருவகத்திற்கும். . .பால் அவரிடம் எங்களால் "உணரப்பட்ட" அருளுக்கும் சமமாகும். . .

நான் கொண்டுள்ள சிவ வழிபாட்டின் விளக்கத்தை சொல்லுகிறேன். . .இவைகள் உங்களுக்கு நிச்சயமாக சொல்லி இருக்கமாட்டார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். . .(தமிழகத்தில் நாத்திகத்தை வழி நடத்துவோர் மீதுள்ள அளப்பரிய நம்பிக்கை). . .

முதலில் சில முனரிவுப்புகள். . .

--உலகில் தோன்றும் எல்லா உயிர் இனங்களின் மூல செல் spherical வடிவத்தில் தான் இருக்கும் தாவரம்,நுனுயிரிகள் உட்பட. . .(எட்டாம் வகுப்பு அல்லது ஒன்பதாம் வகுப்பு அறிவியல் புத்தகம் even tamil medium, cbse)

வயிற்றில் உதித்த மூன்று மாதத்துக்கு உட்பட்ட கருவை தமிழில் குழவி என்று வார்த்தையில் அழைக்கப்படும். . .அது நாம் அம்மியரைக்கும் குழவி என்று அழைக்கப்படும் வார்த்தை தான். . .இதுவும் spherical வடிவம். . .

இந்த பூமி spherical வடிவம். . .உருண்டை அல்ல!(Source: NASA). . .இதை தமிழில் 3000 ஆண்டுகளுக்கு முன்னமே "அண்டம் "என்று குறிப்பிடப்பட்டுள்ளனர். . .

லிங்கம் என்று குறிக்கப்படும் உருவமும் spherical வடிவம். . .

"லிங்கம் -குழவி -மூலசெல் -உலகம் -அண்டம் ". . .

சிவன் கோவில் பார்த்து இருப்பீர்கள். . .கோவிலுக்கு வெளியில் என்ன நிறத்தில் வண்ணம் பெறப்பட்டு இருக்கும்?

வெள்ளை. . .சிவப்பு. . .சரியா?

உள்ளே சுவாமி சன்னதி என்னவென்று குறிக்கப்படும்?

கருவறை. . .சரியா?

அது எங்கு இருக்கும்?

கோவிலின் நடு மையத்தில். . .சரியா?

வெள்ளை- - -ஆண் தன்மை அதாவது விந்தின் நிறம்

சிவப்பு-----பெண் தன்மை அதாவது ஸ்ரோநியத்தின் நிறம். . .

இரெண்டும் இணைந்து கருவறையில் முதன் முதலில் உயிர் உருவாகும் உருவம் spherical வடிவம். . .எல்லா உயிர்களின் ஆரம்பமும் இறைவன் என்ற தத்துவத்தை உணர்த்துவதே. . .சிவலிங்க வழிபாடாகும். . .இறைவனே உலகின் எல்லா உயிர் இனங்களின் பிறப்பிடம் என்று உணர்த்துவதே சிவலிங்க வழிபாடாகும். . .

மற்றொன்றையும் சொல்லி கொள்ள ஆசைப்படுகிறேன். . .

பிராமணர்கள் மீதுள்ள கோவத்தில் இறைவனை பழிக்காதீர்கள். . .இறைவனை பிராமிணர்கள் மட்டும் வணங்க வில்லை. . .அவர்கள் தான் இதை படைத்தார்கள் அதனால் தான் என்று. . . நீங்க சொல்ல விளையலாம். . .அன்றய காலங்களில் இவற்றை உருவாகியவர்கள் இவர்கள் என்று இது வரை ஆதாரமாக எதுவும் இல்லை. . . அதற்க்கு விளக்கம் தந்தவர்கள் (நீங்கள் சொல்கின்ற அவர்கள்) நோக்கத்தை நம் அனுமானத்தால் சரி ,தவறு, சரி என்று சொல்லமுடியுமே தவிர நோக்கத்தின் மூலத்தை அறிய முடியாது. (இறைவனை போலவே அதுவும் நடுவு நிலையில் இருக்கிறது). . . . .ஆனால் பிற்காலத்தில் வந்த பிராமிணர்கள் இதை தவறாக, ஆதிக்க வர்க்கதிர்க்கான அக மகிழ்ச்சிக்காக பயன்படுத்தி இருக்கிறார்கள். . .அதில் 100%. . . அதற்க்கு இறைவன் கருடபுரனாதின் படி தண்டனை குடுப்பார்,கொடுத்தார் என்று உங்களிடம் நான் சொல்ல முயற்சிக்க மாட்டேன். . .ஆனால் according to the Newton's third law . . .நியுட்டனின் மூன்றாம் விதிப்படி. . .நிச்சயம் அவர்கள் செய்த வினைக்கு எதிர் வினை உண்டு. . .

அவர்கள் இங்கு வாழ வந்தவர்கள் நாம் தான் மன்னிநின் மைந்தர்கள். . .அவர்களுக்கு இங்கு எந்த உரிமையையும் இல்லை. . .என்று ஒரு தி.க மேடையில் முழக்கம் இடுவதை கேட்டேன். . .தி.க. நோக்கம் பகுத்தறிவது தானே நண்பா. . ? அப்படி என்றால் நாம் யாருமே இந்த மண்ணின் மைந்தர்கள் இல்லை நண்பா. . .google serch க்கு சென்று human immigration. . .என்று தேடுங்கள். . .

மனித இனத்தின் ஒட்டு மொத்த பிறப்பிடம் south Africa. . .

அப்படி பார்த்தாலும் நாம் தானே முதலில் வந்தோம். . .அவர்கள் பின்பு வந்தவர்கள் தானே என்று நீங்கள் மேலும் வாதிட்டால். . .

எப்படி ஒரு அறிவியல் கண்டு பிடிப்பை ஒரு மேலை நாட்டுக்காரன் கண்டு பிடித்த போதிலும் அது நமக்கும் சவுகரித்தையும் மன நிறைவையும் ஏற்படுத்தும் போது அதை நீங்கள் ஏற்று கொள்கிறீர்களோ அப்படித்தான் என் நாட்டில் என் மனதுக்கு அமைதியை தருகின்ற ஆன்மிக கண்டுபிடிப்புக்கள். என்று. . .அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். . .

இதில் உங்கள் நிலை என்ன என்பது எனக்கு தெரியாது. . .ஆனால் தமிழகத்தில் பொதுவான நாத்திகவாதிகள் இந்த நிலையை கை ஆளுகிறார்கள். . .(600 ஆண்டுகளுக்கும் 300 ஆண்டுகளுக்கும் முன்பு வந்த இஸ்லாமும் கிரிஸ்த்துவமும் ஏற்றுகொள்ளலாம். . . என்றோ வந்தான் (approximately 10,000 years before source: The Myth Aryan Invasion -Frawley) எனபடுவோரை நீங்கள் வெறுக்கலாம். . .எங்களையும் அப்படிச் செய் என்று பணிப்பது. . .எவ்வாறு பகுத்தறிவாகும்). . .

எல்லாவற்றுக்கும் மேலாக இறவன் என்பவர் மிகப்பெரிய மனோ பலமாக இருக்கின்றார். . .

மறுபடியும் சொல்கிறேன் பிரமணர்கள் தவறு செய்து இருக்கிறார்கள். . .இறைவன் செய்ய வில்லை. . .நிச்சயம் தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிப்பார்கள். . .அது இறை விதியாகவும் இருக்கலாம் நியுட்டனின் மூன்றாம் விதியாகவும் இருக்கலாம். . .

இறுதியா சொல்லுகிறேன் இறைவன் என்பவர் உணரப்பட வேண்டியவர். . . . புரியப்பட வேண்டியவர் அல்ல. . .அதனால் தான் இறவனைப் பற்றிச் சொன்னேன் . . . இறைவனைச் சொல்ல வில்லை. . .நான் உணர்கிறேன் நற்றமிழன். . .

-கண்ணப்பன்செந்தில்