Monday, 16 September 2013

மதுரையில் அணுக்கழிவு ஆய்வு மையம். . .!!??மதுரை வடபழஞ்சியில் அணுக்கழிவு ஆய்வு மையம் அமைக்க பாபா அணு சக்தி ஆராய்ச்சி கழகம் மூலம் டெண்டர் விடப்பட்டு உள்ளது. சமூக ஆர்வலர்கள் மற்றும் இந்தியாவின் தவறான அணுசக்தி அனுகு முறையை தீவிராமாக ஆராய்ந்து வரும் வல்லுனர்கள் மத்தியில் இந்த நிகழ்வு 2 சாத்தியங்களுக்காக இருக்கலாம் என்று முன் மொழியப்படுகிறது அவை

1. அணு உலை உள்ள நாடுகள் தங்கள் அணுக்கழிவுகளை Deep Geological Repository என்று சொல்லப்படுகிற பூமிக்கடியில் வெகு ஆழத்தில் புதைக்கும் மையங்களை கொண்டு இருத்தல் வேண்டும், இதுவரை இந்தியாவிடம் இப்படி ஒரு மையம் இல்லை என்பது கூடங்குளம் அணு உலை தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் வெளிகொனரபட்டது அதன் பிறகு கர்நாடக மாநிலத்தின் கோலார் பகுதியில் அமைக்கலாம் என்ற முதற்கட்ட ஆய்வின் போதே அந்த பகுதியின் அனைத்து மக்களும், அனைத்து கட்சிகளும் (காங்கிரெஸ் மற்றும் பா.ஜ.க உட்பட) ஒருமித்த குரலுடன் எதிர்த்து செய்யப்பட்ட பெறும் போராட்டங்களினால் அந்த திட்டம் கைவிடபட்டது. . .அந்த கைவிடப்பட்ட திட்டமே மதுரை வடபழஞ்சியில் அணுக்கழிவு ஆய்வு மையம் என்ற பெயரில் அமைக்கபடுவதாக இருக்கலாம்.

2. கதிர் வீச்சின் அளவை அறியக்கூடிய டிடெக்டர் லேபரட்டரிக்காவும் இந்த டெண்டர் விடப்பட்டு உள்ளது எனபடுகிறது. இது நிச்சயமா கூடங்குளத்தில் விபத்து நிகழ்ந்தால் அல்லது இயல்பாகவோ அங்கு இருந்து கதிர்வீச்சு மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு பரவும் சாத்தியங்களை உறுதி செய்கிறது.

நமது வாழ்வாதாரங்களின் பாதுகாப்பை நாம் தான் சிந்திக்க வேண்டும் எந்த ஒரு காலத்திலும் ஆட்சியாளர்களோ அல்லது ஆணவமும் லாப நோக்கமும் கொண்ட அரசியல்வாதிகள் சிந்திக்க. . .!!?? ஏன் கருத கூட மாட்டார்கள்.

Saturday, 27 July 2013

வாலி நீ என்றும் வாழி !!!!


இனி யாரிடம் கேட்போம்
எடுத்த மொழி
அடுக்கி வரும்
மிடுக்கின் தமிழை. . .?

இனி யாரிடம் பருகுவோம்
தொடையும் சந்தமும்
எதுகையும் மோனையும்
துளிர்த்து வரும்
இன் தமிழ் அதகத்தை. . .?


இனி யாரிடம் பார்ப்போம்
செம்மாந்த நடை 
பொறையாரந்த நிலை
இறையார்ந்த சொல்
அருவி வரும்
என் தமிழ் அருவியை. . .? 

முருகா
இவரின் உயிர்
உன் இணையடி தாமரையில்
இளைப்பாற இறைஞ்சுவதர்க்கு
என் நலம் தடுக்கிறது. . .
இவரை மீள்வித்து
மீண்டும் பிறக்கச்செய்
நின் தமிழை
நிகரில்லாமல் நிகர்க்கச் செய்

வாலி நீ என்றும் வாழி!!!!!

Sunday, 14 July 2013

இரசவாத உண்மை

சோழிகள் உருளும்
ஜதி
மின்னல் பூக்கும் ஒளி
சிரிக்கவில்லை 
சிறுகச் சிறுக
சிதைக்கிறாள் என்னை. . . 

இரசவாத உண்மை
 
உன் 
மாதுள மணி நிற உதடுகளுக்கு 
பின் 
ஒளி(ர்)ந்து விளையாடுகிறது. . . 

திமிர் பிடித்தவள் என்கிறாள் 
உன் தோழி 
யாருக்கு தான் இவளை பிடிக்காது?!
பாவம் "திமிர்" 
என்கிறேன் வெகுளியாக. . . Sunday, 23 June 2013

ஜூன் 24 கவியரசரின் பிறந்தநாள்


எட்டு வார்த்தை கொண்ட வாழ்த்துக்கு
எதுகைக்கும் மோனைக்கும்
இரவெல்லாம் ஏங்கி
விழி இரண்டும் விழித்தும் சிவந்தும்
வெற்று காகிதத்தை வெறித்து பார்க்கையில். . .
சற்றும் யூகிக்க முடியாத,
விண்ணுக்கும் மண்ணுக்கும் விரித்தாலும் கொள்ளாத
காதலாய் காமமாய்
இறையாய் தத்துவமாய்
பெறும் இன்பமாய் இருந்தது இவன் தமிழ். . .

மதுவில் திழைத்து வந்த வரிகள்
என்று
குடித்து விட்டு வாந்தி எடுக்கும்
தற்குறிகள் தர்க்கத்தை எண்ணுகிறேன். .
பாவத்தின் மது
செய்த புண்ணியம்
கவிஞனின் உடலில் இருந்தது.,
கவிதைகள்
அவனுள் இருந்தது. . .!!!!
அது
தீரா திழைப்பு. . .
பரிணமித்த
பாரதியின் பாதச்சுவடு. . .!

இக பரம் இரண்டுக்கும்
இறைவன் முருகன்
இதை எடுத்தாண்டதால் தானோ
இவன் இந்தமிழும்
எனக்கு முருகு. . .!!!

கண்ணதாசன்

அவனின் தாசன்


Thursday, 2 May 2013

காற்று. . .!!!


உரு இல்லாத காற்று
உன்
கருங்கூந்தல் உடனான சரசத்தில்
உயிர்க்கிறது என் காதல். . .

உயிர் காற்று
நெருப்பின் தேவை
எத்துனை உண்மை. . .!
உன்
உயரின் காற்றல்லவா
என்னில் தழல்கிறது. . .

மெல்லியது காற்று,
மிகை மெல்லியது
நுதல் வழி விழி தொடும்
உன்
முன் கூந்தல். . .

எதிர் வரும் காற்று
உன்
கேச ஸ்பரிசத்திர்காக. . .

சூழும் காற்றில்
சுழலும் நினைவில்
-கண்ணப்பன்