Monday 28 June 2010

கார்த்தி'கை'யில் தீபம். . .



கார்த்திகைக்கும் தீபத்திற்கும்,
காலம் தொட்ட,
கலாச்சார உறவு உண்டு
அந்த உறவின் தன்மை
ஒளிமயமானது. . .
பார்ப்பவர்களை லயிக்கச் செய்கிறது. . .
-------------
தீபம்,
எத்தனை மாதங்கள் ஒளிர்ந்தாலும்,
உன்னதம் என்னவோ கார்த்திகையில் தானே. . .

தீபம் இல்லாத கார்த்திகை ....?
"பத்தோடு ரெண்டு. . .
பன்னெண்டு" ஆகியிருக்கும். . .
-------------
தீபம் கண்களை கவர்கிறது,
கார்த்திகை இதையத்தை ஈர்க்கிறது. . .
பார்வையும், எண்ணமும். . .
நேர்கோட்டில் இணையும் தருணத்தில்,
அற்புதமான பயணம் தொடங்குகிறது. . .

அந்த பயணம்
மான்களும் மலர்களும் சூழ்ந்த,
பசுமைப் பள்ளத்தாக்கில் தொடர்கிறது. . .
ஆஹா. . ! என்ன ரம்யமான காட்சி !

கற்பனை ஓவியமயமானது. . .
அதற்குத் தெரியவில்லை,
"பாவம்-கார்த்திகை, அதற்க்கு 29 நாட்கள் தான்"
என்று. . .

இவ்வாறு எதிர்படும் எண்ணங்களை
எழுத்தாக்க,
வார்த்தைகளைத் தேடி
வானம் பார்த்திருந்த வேளையில்,
இப்படி ஒரு வாசகம் சிக்கியது. . .

"டேய் கண்ணப்பா ! பொழப்ப பாருடா". . .

No comments: