Wednesday, 2 June 2010

ரெமி. . .


ரெமி. . .
அடம்பிடிக்கும் மழலை. . .
கண்கள் குளிர்ந்துபோக சிரிப்பாள்,
காதுகள் நெகிழ்ந்துபோக பேசுவாள்,
அவள் விளையாட்டு பாவனைகள். . .அடடா!
எந்த ஒரு இறுக்கமான சூழலையும்
இளவங்கள் காற்றோடு கலக்கும் காட்சியாக்கும்
அதுவே அவளின் தனித்துவ மாட்சியாகும். . .
கர்வம்,
அவள் கால் நெகங்களின் நிழலை கூட நெருங்காது. . .
கள்ளம். . .என்பதே காணாத உள்ளம். . .

19-05-10 அன்று ரெமிக்கு திருமணம். . .

என்னால் யூகிக்க முடியவில்லை,
விளையாடிக்கொண்டிருந்த பிள்ளைக்கு
விவாகமா ?
பாலர் திருமணத் தடைச் சட்டம் . . .அமலில் தானே இருக்கிறது ?
கேள்விகளின் வேகத்தால் அன்று
மெரினாவின் அலைகள் கொஞ்சம் upset. . .
ஒன்றும் புரியவில்லை. . .
mansion-க்கு சென்று தூங்கிவிட்டேன் . . .
ஆம், எனக்கு ஒன்றும் புரியவில்லை என்றால் உடனே தூங்கிவிடுவேன் . . .
என் collage CGPA-க்கள் அதற்க்கு சாச்ட்சி. . .

23-05-10 அன்று Reception. . .

22-05-10 இரவு. . .
கோயம்பேடு பேருந்து நிலையமா ?
வடநாட்டு கும்பமேளாவா ?
அப்படி ஒரு கூட்டம். . .

"திருச்சிக்கு போகணும் Ticket வேணும்"
இப்படி ஒரு இடைத்தரகரிடம் கேட்டேன். . .
அவன் ஒரு திசையில் கையை நீட்டினான். . .
"வரிசை நிற்கிறது"
நானும் நின்று விட்டேன். . .
முன் நின்ற முதியவரிடம் விசாரித்தேன்,
"தனியார் வண்டியில் தரையில் அமர்ந்து போவதற்கு 500 ரூபாய், ஆறு பேர். . .அவருக்கு முன்னால் அதற்கும் நிற்கிறார்கள் "
மணி இரவு 11. . .
இறைவன் புண்ணியமோ, இடைத்தரகர் புண்ணியமோ. . !
உக்காருவதர்க்கு ஒரு Ticket வாங்கிவிட்டேன். . .
இந்த நிகழ்வுகள் என்னை ஒன்றும் செய்யவில்லை,
காரணம். . .ரெமிக்கு எப்படித் திருமணம் செய்தார்கள். . .?
என்ற வினாவும், அதற்க்கு விடை காணும் ஆவலும். . .

23-05-10 மாலை 7:00 மணி. . .

திருச்சி சௌபாக்யா மஹால்,
பரம சௌபாக்யவதியாக நிற்கிறாள் என் தோழி. . .
என்னை பார்த்தவுடன்,
தன் இரு புருவங்களையும் உயர்த்தி ,
சின்னச் சிரிப்புடன் வரவேற்கிறாள். . .
திகைத்து நிற்கிறேன். . !

அதைத் தவிர என்ன செய்ய முடியும் ?




பட்டும் , மாலையும்
அவளால் அன்று மேன்மை கொண்டது. . .
கிறிஸ்த்துவ பெற்றோர்களுக்கு மகளாகிவிட்டால்,
இல்லாவிட்டால். . .
பொட்டும் அன்று மேன்மை கொண்டிருக்கும்.

அதே ரெமி பாலாதான்,
அனால் திருமணப் பெண்ணாக. . .
திகைப்பூட்டும் விதத்தில் காட்சியளிக்கிறாள். . .
காலத்தின் கலைவண்ணத்தை போற்றுகின்றேன்.
காற்றின் அலைகளில் காதுக்கு எட்டியது. . .ஒரு குரல். ..
அது இப்படிச் சொன்னது. . .
"அவளுக்கு ஒரு வயது அதிகமாம் . . !
திருமணத்திற்கு தேவையானதை விட. . .(22)
மெல்ல புன்னகைக்கிறேன். . .
என் தவறை நினைத்து,
ஆம், அவளை குழந்தையாகவே பாவித்த என்னுடைய
தவறை நினைத்து. . .
சில நேரங்களில் தவறும், இன்பம் தருகிறது. . .

எத்தனையோ பெரியவர்கள் வாழ்த்துகிற இடத்தில்,
நானும் வாழ்த்த வேண்டும். . .

வாழ்த்துவதற்கு வயது இல்லை ,
எனக்கு அது தேவையும் இல்லை. . .
மனம் தான் வேண்டும் ! என்று என் மனம் சொன்னது.

. . .மனம் நிறைந்து வாழ்த்தினேன். . .
"வாழ்க வழமுடன் "

நண்பர் Victor-க்கு நன்றிகள். . .
வசந்தத்தின் வண்ணங்களை
என் தோழியின் முகத்தில் வியாபிக்க செய்ததற்கு. . .

கண்ணப்பன்

No comments: