சமுதாயச் சுழலின் ஆதிக்கத்திற்காக,
தன் "குழந்தைத்" தன்மைகளை
மாற்ற முயற்ச்சிக்கும், மானுடம்.
முயற்ச்சிகளின் முடிவில் தோல்வியுற்று,
எங்களை வென்றுவிட்டான் - நட்பினில். . .
கதையில் பார்த்த கர்ணனை,
காருண்யாவில் காட்டியவன். . .
நடப்பு வட்டத்திற்கு,
டீயும், புகையும் தருவதற்காக
அண்ணாச்சி கடை,
இவனை குத்தகைக்கு ஏற்றிருந்தது. . .(அது ஒரு வசந்த காலம்)
. . .
இவன்,
தட்வெட்ப மாறுதலுக்காக, மாறும்
மரங்கள் சூழ்ந்த வனத்தில். . .
தரம் மாறாத ஸ்தல விருட்சகத்தின் *பிரதான பாகம்*. . .
அன்புள்ள சதீஷ். . .
உயர்ந்து வாழ்வான்,
ஓவியமாய் பிறந்த ஒரு மகன்
என்ற,
உன் பெற்றோர்களின் கனவுகளுக்கு. . .
வண்ணம் தீட்ட , வாழ்த்துக்கள். . .
-கண்ணப்பன்
*{பிரதான பாகங்கள். . .ஒன்று மட்டும் அல்ல. . .}*
No comments:
Post a Comment