Thursday, 1 October 2009

கடல் கடக்கும் நண்பனுக்கு,

கவிபடிக்க விருப்பம். . .

கண்மூடித்தனமான காலம்,

நட்பினில்,

நான் கொண்டிருந்த ஆழம். . .

கவிதை

காட்டாறாய் பெருகியது. . .

பூட்ட முடியாத,

புனலுருவாய் பூரித்தது. . .

கண்களை மூடுவது

காதலுக்கும்,

காலம் கடந்ததற்க்கும்,

காட்ச்சியாக இருக்கும். . .

காண்பவர்க்கு,

ஒரு சாட்ச்சியாக இருக்கும். . .

நட்புக்கும்,

நடப்புக்கும்,

நல்லது அல்ல. . .என்று நீ

எடுத்துரைத்த மந்திரத்தால்,

மயக்கும் தந்திரத்தால் ! ! !. . .

கண்களை திறந்து வைத்தேன். . .

கண்களை திறந்து வைத்தேன். . .

விழித்தது விழிகள்,

விளைந்தது. . .

கவிதைக்கு தட்டுப்பாடு. . .

இருப்பினும் வாழ்த்த வேண்டும்,

இனிமைக்கு இனிமை சேர்க்கும்

இன்முகம் கொண்டவனை,

பெண்கள் மனம். . . கண்டவனை,

இளம் பிறை உறையும் வாசனை,

கார்த்திகை நேசனை. . .

வாழ்த்த வேண்டும்,

வாழ்த்துக்கள். . .

நம்மை

ஆண்டவர் மண்ணில்,

ஆளுமை பயின்று. . .

அவரை ஆலும் திறம் கொண்டு. . .

அழியாத தமிழுடன்,

அன்னை பாரதம் வருக. . .

அதுவரை அன்பன் முகம் காணும்,

ஏக்கங்களுடன். . .

No comments: