Friday, 26 September 2008

இறப்பதற்காக. . .

(நண்பனின் "பந்தம்" என்ற கவிதை கண்டு. . . என் உதற்றல்கள்)

அலங்கார தேவியே,

வணிதாவனி. . .

அன்பனை கவிபாட,

அருள்வாய் இனி. . .

. . .

உள்ளத்தின் உதிரத்தை ஒன்றாக்கி,

உயிர் தந்தாய். . .

உயிருக்கு

"பந்தம்"என்றொரு பெயரும் தந்தாய். . .

எழுதிய ஒரு கவிதையில்,

என்னைச் சாகடித்தாய். . .


எத்தனை முறை சாவேன் ?

எத்தனை முறையும் சாவேன். . .

ஏழு சென்மமும் சாவேன் . . .

பிறப்பதையே தொழிலாக்கிவிட்டேன்,

உன் கவி படித்து,

இறப்பதற்காக. . .


தேவதைகளே !

தேடலை நிருத்துங்கள். . .

உங்கள் அமரத்தன்மையின்,

அமிர்தம். . .

என் நண்பனின்

காலடியில். . .

-கண்ணப்பன்செந்தில்

No comments: