Thursday, 11 September 2008
திழைத்தேன். . .
அன்று ஒரு இரவு,
மீண்டது . . .
நண்பனின் உறவு.
முரண்பட்டது. . .என் மீது,
திறன் கொண்டவனின்,
முரண்பாடுகள். . .
விண்ணோடு விளையாட
விளைந்த,
காகிதக் குவியல்கள். . .
கண்ணிமைக்கும் பொழுதில்,
கடுகுத் தீயில்,
காற்றாய்,
கரியாய்,
கருத்திழந்த கதை போல. . .
நண்பனிடம். . .
இல்லை...இல்லை...
நட்பிடம்,
நான் கொண்ட. . .சினமெல்லாம்,
சின்னா பின்னமாய்,
சிதறிப்போனது. . .
வேசம் கொண்ட வெறுப்பெல்லாம்,
நாசமாய் போனது,
நேசமாய் ஆனது. . .
திழைத்தேன் என்னில். . .
பிழைத்தேன் மண்ணில். . .
ஏகாந்தம் கொண்டாடும்,
"ஏகனே ". . .
ஒன்றில் உண்டு. . .
ஆயரம் கோடியில் ,
அடங்காத தசமங்கள். . .
என்னில் நீ. .யும் அப்படித்தானடா. . .
எப்படிச் சொல்வேன். . .இதை,
என்னைப் பெற்றெடுத்த,
முத்தமிழில் ? ? ?
"உறக்கத்தில் "
உளறினாலும், உண்மையைச் சொல்வேன். . .
"தள்ளாத" நிலையுலும் ,
தளராத வார்த்தை கொள்வேன். . .
காரணம்,
எழுத்து என்கிற மதத்தில். . .
கண்ணதாசனை,
கடவுளாக கொண்டவன் நான். . .
உணர்வுகளின் வெளிப்பாடே,
எங்கள் மதத்தின்,
உயிரோட்டம். . .
வேண்டுவதை தந்திடும்,
வேதத்தின் நாயகா. . .
வேண்டுவது உன்னிடம்,
"வேண்டாம் "
வேண்டாம். . .இனி,
இந்தச் சந்திர சாகசம்,
எங்கள் நட்பில். . .
இனி. . .என்றும்,
எட்டுத்திக்கும் விட்டெரிக்கும்,
இளஞ் சூரியனாய்,
சுடரட்டும். . .
பரிதிஇன் நிழலில். . .
-கண்ணப்பன்செந்தில்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment