Tuesday, 24 July 2012

நாளைய ஒளிர்வு. . .

பாதைகள் எங்கும்
மின்னூட்டங்கள் வியாபித்திருந்தது
கிரகித்துகொண்டேன்.

நாளைய எந்தன் ஒளிர்வின் 
பிரம்மாண்டத்தை 
இன்றே  உணர்ந்து

வளரவிடாமல் வெட்டப்பட்ட 
தாவர வேலிகள்,
அதன் பின்னுள்ள அலங்கார மலர்கள்,

ஆலவட்டதின் அயர்வில்
அசையாது நிற்கும் வீதி மரங்கள்,

பசுமையான புல்வெளியுடன் தொடங்கும்
காடுகள்,

அந்திமயங்கிய வானவிதானத்தின்
அழகுச் சூரியன்,

செடிகளுக்கு தண்ணீர் விடும் 
மூதாட்டியின் என்மீதான 
அனுதாபப் பார்வை,

அறிமுகம் இல்லாத 
வெள்ளைகார பெரியவரின் 
சிரிப்பு,

பி.சுசீலாவின் "அமுதை பொழியும் நிலவே"
பாடல்,

வாழ்த்துகள் சொல்ல


பெருமிதத்தில்
நண்பர்கள் நிறைந்த வீடு திரும்பி 
சோ(அ)கமாய் அமார்கிறேன். . . !






Saturday, 24 March 2012

திருப்புறவார்பனங்காட்டூர் - முதல்வருக்கு ஒரு வேண்டுகோள். . .


உ
நீடல் கோடல் அலரவெண் முல்லை
நீர்ம லர்நிரைத் தாத ளஞ்செயப்
பாடல் வண்டறையும் புறவார் பனங்காட்டூர்த்
துளங்க வெண்குழை துள்ள நள்ளிருள்
ஆடுஞ் சங்கரனே அடைந்தார்க் கருளாயே
-திருஞான சம்பந்தர்
மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு,

                                வணக்கம், இறைவனின் மாரில்லாத கருணையின் வெளிப்பாட்டால் தங்கள் ஆட்சியில் தமிழகம் வளமையும், அன்பும், ஆனந்தமும் பெருக வேண்டும் என்று எம்பெருமானின் திருவுலத்தை பிராத்திக்கிறேன்.
 மேற்ச்சொன்ன பாடல் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரால் “திருப்புறவார்பனங்காட்டூர்”  ஸ்ரீ புறவம்மை உடனுறை ஸ்ரீ பனங்காட்டீசர் பெருமான் திருவருள் நோக்கி பாடப்பெற்ற தேவாரப் பாடல், நாளும் தில்லையாலும் ஞானமா நடராச மூர்த்தியின் திருவருளை எண்ணி உள்ளம் உருகி விழி செருக வழிபடும் சிவனடியார் பெருமக்கள் தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்கள் யாவையும் திரு கைலைக்கு பொருந்தி வழிபடுவார் என்பதை ஆன்மீக ஞான மார்க்க வழிதேடும் நீங்கள் அறியாததொன்றுமில்லை, அப்படி இருக்க தங்கள் மேன்மை மிகுந்த ஆட்சியின் கீழ் உள்ள தமிழகத்தின், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற பணயபுறம் (திருப்புறவார்பனங்காட்டூர்) திருப்பனங்காட்டீசர் பெருமான் திருக்கோவிலை நெடுஞ்சாலை அமைக்கும் பொருட்டு, இடித்து அகற்ற போவதான செய்திகேட்டு இதயம் ஒருங்கிய நிலை அடைந்துள்ளோம். அறிவின் மேன்மை பொருந்திய பொறியாளர் பெருமக்கள் தங்கள் அனுபவ மேன்மையால் வேறு ஒரு பாதை கொண்டு சாலை அமைக்க முடியும் ஆனால் எதிர்த்து செய்ய பனி ஒன்று அறிந்திடாத ஏழை நாங்கள், சூது தவிர்த்து சிவநெறி தலைத்து ஓங்கச் செய்த ஞானசம்பந்த மூர்த்தி ஸ்வாமிகள் பாடிய 1000 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க ஸ்தலத்தை எங்கனம் மீள்கொனர்வோம் ? நெடுஞ்சாலைக்கு மற்றுப் பாதை அமைக்க வழி வகை செய்து அடியார்கள் இதயம் ஆனந்தமுற நீங்கள் நல்லதோர் நடவடிக்கை மேற்கொண்டு அடியார்க்கு அடியானின் திருவருளுக்கு பாத்திரமாக வேண்டும் என்று மன்றாடி வேண்டிகொள்கிறோம்.

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே.

என்றும் தங்கள் கீள்படிந்துள்ள
கண்ணப்பன் 





(படங்கள் : http://www.shaivam.org )





Wednesday, 21 March 2012

அணு(கு) முறை. . .!



ஆயிரம் தான் சொன்னாலும் தற்போதைய சூழ்நிலையில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு இந்தியா போன்ற வளரும் நாட்டில் அணு மின்சாரத்தின் தேவை நிச்சயம் தவிர்க்க இயலாதது. . .! அதே சமயம் அதில் உள்ள ஆபத்தும் மறுக்க முடியாதது, அதில் இருந்து வெளியேறும் கதிரியிக்கம் நிறைந்த நீரினால் மீன் வளம் குறையும் என்ற மீனவ மக்களின் வாதம் இயல்பானதும், அவர்களின் வாழ்வாதார சம்பத்தபட்டதும் கூட. . .!மீன் கிடைத்தால் தானே அவர்கள் அதை குளிர் பதனிடு(cold storage) அறையில் சேமிக்க இயலும் ?

 இப்படி உள்ள சூழ்நிலையில் கூடங்குளத்தில் சாலைகள் போடுவதை போன்ற "இனாம்" அரசியலை தவிர்த்து அதில் வெளியேறும் நீரின் தரத்தை மேம்படுத்தி வெளியேற்றுவதற்கு அனைத்துலக (மறுபடியும் இந்திய அணு விஞ்ஞானிகள் அல்ல...!) சூளியில் வல்லுனர்கள் மற்றும் அறிஞர்களை கொண்டு ஒரு புது நீர் மேம்பாட்டு சுத்திகரிப்பு நிலையத்தையோ அல்லது ஏற்கனவே உள்ளவற்றில் மாறுதல்கள் கொண்டோ வடிவமைக்கலாம். . .! அது மட்டும் அல்லாமல் 20 வருடங்களுக்குள் இந்த அணு மின்நிலையத்தை மூடுவதற்கான உறுதி மொழி  ஒப்பந்தத்தில் முதல்வர், பிரதமர் உள்ளிட்டோர் கையெழுத்திட்டு அந்த சமூகத்திடம்  வழங்குதல் வேண்டும். . .! நேர்மையாக சொல்கிறேன் முதல்வர் (திரு.ஜெயலலிதா ) போன்ற சிறந்த நிர்வாகிக்கு இயற்கை சார் மின் மேம்பாடு திட்டத்தை செளுமைபடுத்தி செயல்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு 5 வருடமே அதிகம் தான். . .!

இத்தகை நடவடிக்கைகளை மேற்கொள்வதை விடுத்து அதிகார பலத்தை ப்ரோயோகித்து அந்த மக்களின் வைற்று எரிச்ச்சலை பெரும் பட்சத்தில். . .முதல்வரை  நல்லோர் சமூகம் திரு.செல்வி ஜெயலலிதா என்று அழைக்கும் மாண்பை விடுத்து "பொம்பள அழகிரி" என்று அருவருப்போடு அழைப்பார்கள் என்பது நிச்சயம் . . .!

 


 




பின்குரிப்பாக சில கோரிக்கைகளை சொல்லிக்கொள்ள ஆசைபடுகிறேன். . .
நாராயண சாமி, சுப்பிரமணிய சாமி, சோ. இராமசாமி குருமூர்த்தி, தினமலர் அதிபர், தினமலர் ஆசிரியர் பெருமக்கள் மற்றும் ப.சிதம்பரம் யாவரும் இந்த 20 வருடத்திற்கு தங்கள் மனைவி, பிள்ளை குட்டி மற்றும் பேரன் பேத்திகளோடு "பாதுகாப்பான" அணு உலைக்கு அருகாமையில் வாழ்வதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தால் இந்த பகுதி மக்களுக்கு அணு உலையின் பாதுகாப்பின் மேல் நம்பிக்கை வருவதோடு அவர்கள் யாவரும் உண்மையை நிரூபித்து காட்டும் சத்திய சீலர்கள் என்று சில அறிவிலிகளுக்கு(நான் உள்பட) புரியம் என்பதை பணிவன்புடன் தெரிவித்து கொள்கிறேன். . .!
- கண்ணப்பன்
(படங்கள் : google.com)

Wednesday, 15 February 2012

சுகந்தம். . .

பொருந்திச் சொல்ல
மலர் ஒன்று இல்லாத
சுகந்தம். . .
சுவாச காற்றினுள் சுழல்கிறது,
இடைவெளி இளைக்கிற தருணங்களில். . .!

Thursday, 3 November 2011

மதிப்புக்குரிய முதல்வர் அம்மா அவர்களுக்கு,

மதிப்புக்குரிய முதல்வர் அம்மா அவர்களுக்கு,
தாவுநீர்க் கடலைப் போல்
தண்ணருள் அலைகள் பொங்கும்
சந்திரப் பிரப்பூங் கண்ணி
சற்றுநீ திரும்பிப் பார்த்தால்
மேவிய வறுமை தீர்ப்போம்
மின்னிடும் விழிகள் காண
விழைந்தனோம் போற்றி ! போற்றி !
(-ஆதிசங்கரர், தமிழில் கண்ணதாசன் )
மாலவன் மார்பிலாடும் திருமகள் தாங்கள் எண்ணத்தின் நற்செயல்கள் யாவும் ஆக்கம் பெற தமிழகத்தை செல்வமயமாக்கி இன்னருள் புரிய பிராத்திக்கிறேன். . .

சென்னையில் உள்ள “அண்ணா நூற்றாண்டு நூலகத்தை", குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றத் தாங்கள் முடிவெடுத்து இருப்பதாகச் செய்தி அறிந்தேன்! இது நிச்சயம் நடந்துவிட கூடாது அம்மா!
நான் தற்போது லண்டன் நகரத்தில் வசித்து வருகிறேன்,இங்கு உள்ள நவீன நூலகங்களுக்கு எந்தவிதத்திலும் மாற்று இல்லாத சிறந்த கட்டமைப்பு மற்றும் வசதிகள் கொண்ட நூலகம் ‘அண்ணா நூற்றாண்டு நூலகம்’.
முன்னர் நீங்கள் அதிநவீன தலைமைச் செயலகத்தை மக்களின் பயன்பாட்டுக்கு பன்முனை மருத்துவமனையாக பணித்த பொழுது தங்களின் தலைமையை எண்ணி மகிழ்ந்த அதே உள்ளம் இன்று அண்ணா நூலகத்தை இடம் மாற்றும் செய்தி அறிந்து துடிக்கிறது. மேலும் அந்த கட்டிடத்தின் உட்கட்டமைப்பு எந்த ஒரு வகையிலும் மருத்தவமனைக்கு ஒவ்வாது.
கடந்த ஆட்சியின் மக்கள் விரோத செயல்களை எதிர்த்து என்னை போன்ற இளைஞர்கள் தங்களுக்கு ஆதரவு பரப்புரை நிலைப்பாட்டை எடுக்க துணிந்து அவ்வண்ணம் செய்தமைக்கு எங்களின் வாசிப்பு மற்றும் படித்தலின் மூலம் பெறப்பட்ட பகுத்தறியும் தன்மை தான். அந்த அறிவு இன்று நீங்கள் எடுத்த நிலைப்பாட்டை வேதனையும் ஏமாற்றமும் நிறைந்து பார்க்கிறது.
இந்த நூலகம் ஏற்கனவே பல ஆயிரம் மக்களுக்குச் சேவை செய்துவருகிறது மேலும் தங்களின் ஆட்சி திறமையை பெரிதும் வியந்து பாராட்டிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பார்வையிட்டு, அங்கே உரையாற்றுகிறபொழுது “ஆசியா கண்டத்திலேயே மிகச் சிறந்த நூலமாக இது அமைந்திருக்கிறது” என்று பாராட்டிச் சொன்னார் என்பதை இந்த தருணத்தில் நினைவு கூற விரும்புகிறேன். இத்தனை மேன்மைகள் நிறைந்த இந்த நூலகத்தை இடம் மாற்றாமல், புது இடத்தில் மருத்துவமனையைக் கட்டவேண்டும் என்று கோருகிறேன்!

தமிழக மக்கள், தங்கள் மேல் மிகுந்த மதிப்பும் அதீத நம்பிக்கையும் வைத்துள்ளார்கள் என்பது கடந்த உள்ளாட்சி மற்றும் இடைத் தேர்தல் மூலம் தாங்கள் அறிந்ததே!
சிறந்த படிப்பாளர் மற்றும் வாசிப்பாளரான நீங்கள், நூலகத்தையும் காப்பாற்றி, குழந்தைகள் நலத்தையும் பேணிப் புகழ் பெற வேண்டும் என்று இரைஞ்சி கேட்டுக்கொள்கிறேன்.
                                               தங்கள் உண்மையுள்ள
                                                   கண்ணப்பன்
Kannappan Shanmuganathan
Block M1, 69F,Forty Lane,
Wembley Park,
London - HA9 9UJ.
+447771303532

Friday, 17 June 2011

மாயை. . .


தலைதுவட்டும் உன்தன்

ஈரம் பூசிக்கொள்கிறேன். . .தனிமையில்.

கனம். . .


காதல் முகில்கள் திரளும்
காணொளி பார்த்ததும்,
என் தோழ்கள் கனமாகிறது. . .
தன் தனிமையில். . .!

Saturday, 7 May 2011

நியான் ஒரிக்களும் மறக்கில்லா. . .!

நிலவின் நெற்றியில்,

உதய சூரியன். . .

இவள் புருவத்தின் மத்தியில்

பொலிவு தரும் பொட்டு. . .

பொன்னிறம் நிறம் பூண்ட

வெள்ளரிப் பிஞ்சாய். . .

விசன சுவாசம் தாங்கும்

இவளின் மூக்கு. . .

பேதை பேசுவதையும்,

கொஞ்சலாய் கோர்க்கும். . .

குழித்த கன்னத்தோடு குலைந்த உதடுகள். . .

இடப்புறக் கால் முன்னெடுக்க,

வலப்புற உடல் பின்னிழுக்க. . .!

அவள் வடிக்கும் நடை அழகுக்கு,

வார்த்தைகளை எங்கே தேடுவேன். . .?

நல்ல வேலை ராஜாங்கம் என்னிடம் இல்லை,

எழுதி வைத்திருப்பேன். . .

மை தடவிய,

இவள் கண்களின் மந்திர மொழிகளுக்கு. . . !

ச்செரக்கில் தம்பிராட்டியின்ட சௌந்தர்யத்தை

நியான் ஒரிக்களும் மறக்கில்லா. . .

Monday, 28 March 2011

சிதறல். . .

கடும் குளிர். . .
கூவுகிறது காற்று,
தேகம் எங்கும்
அனலாய் தழுவுகிராய். . .

கண்ணுக்கு புரியாத
கதிர்வீச்சாய்
கலந்து நிற்கிறாய் என்னோடு. . .

காதலே ! நீ யார் என்று தெரியாமல்,
கவி பாடுகிறேன். . .
உன்னைச் சேராமலே,
பிரிந்து தவிக்கிறேன். . .
காட்சிகள் இல்லாத கணவாய். . .
உருவம் இல்லாத நிழலாய். . .
ஆசைகளாய்,
ஏக்கங்களாய்................ஐயோ ! வார்த்தைகளும்
உன்னால் வஞ்சகம் செய்கிறதடி. . .

அத்தனைக்கும்,
ஆறுமுகனை பிராத்திக்கும். . .
எந்தன் உள்ளம். . .
இன்று உனைக் காண,
"உனக்கான" உள்ளம்
உன்னிடம் பிராத்திக்கிறது . . .பாவியடி நீ !
நண்பன் முருகன் நல்லவன்,
நாளை தமிழ் சொன்னால். . .சரி ஆகிவிடுவான். . .


Friday, 18 February 2011

ஏனோ. . .குவியமில்லா ஒரு காட்சிப் பேழை !


ஏனோ. . .குவியமில்லா ஒரு காட்சிப் பேழை !

உணர்வுகளை வெளிபடுத்தும் சூக்க்ஷும கவிதைகளை யார் எழுதினாலும் ஒரு வித ஈர்ப்பு இருக்கும். . .அவரிடம் தமிழ்ச் செழுமை மேலோங்கும் பொழுது, அது நம்மை மோன நிலைமைக்கு இட்டு செல்லும். . .அவர் மேலும் படித்தவராக (இயற்க்கை அறிவியல்) இருந்தால் அங்கு இருந்து வரும் வரிகள். . .நம்மை மோனத்தன்மையில் ஆனந்த பிரவாகத்துக்கு உட்படுத்துகிறது, லயிக்க செய்கிறது. . .இந்த பாடல். . .! அந்த ரகம்.

நியாபகம் இல்லை, உணர்வில் இருக்கிறது . . .தபு ஷங்கரின் கவிதை நூல் அது. . .இயற்கை அறிவியலை காதலோடு கலந்து மயங்க செய்து இருப்பார். . .வெகு நாட்கள் கழித்து மதன்கார்கியின் வரிகள். . .! வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள். . .