Friday, 17 June 2011

மாயை. . .


தலைதுவட்டும் உன்தன்

ஈரம் பூசிக்கொள்கிறேன். . .தனிமையில்.

கனம். . .


காதல் முகில்கள் திரளும்
காணொளி பார்த்ததும்,
என் தோழ்கள் கனமாகிறது. . .
தன் தனிமையில். . .!

Saturday, 7 May 2011

நியான் ஒரிக்களும் மறக்கில்லா. . .!

நிலவின் நெற்றியில்,

உதய சூரியன். . .

இவள் புருவத்தின் மத்தியில்

பொலிவு தரும் பொட்டு. . .

பொன்னிறம் நிறம் பூண்ட

வெள்ளரிப் பிஞ்சாய். . .

விசன சுவாசம் தாங்கும்

இவளின் மூக்கு. . .

பேதை பேசுவதையும்,

கொஞ்சலாய் கோர்க்கும். . .

குழித்த கன்னத்தோடு குலைந்த உதடுகள். . .

இடப்புறக் கால் முன்னெடுக்க,

வலப்புற உடல் பின்னிழுக்க. . .!

அவள் வடிக்கும் நடை அழகுக்கு,

வார்த்தைகளை எங்கே தேடுவேன். . .?

நல்ல வேலை ராஜாங்கம் என்னிடம் இல்லை,

எழுதி வைத்திருப்பேன். . .

மை தடவிய,

இவள் கண்களின் மந்திர மொழிகளுக்கு. . . !

ச்செரக்கில் தம்பிராட்டியின்ட சௌந்தர்யத்தை

நியான் ஒரிக்களும் மறக்கில்லா. . .

Monday, 28 March 2011

சிதறல். . .

கடும் குளிர். . .
கூவுகிறது காற்று,
தேகம் எங்கும்
அனலாய் தழுவுகிராய். . .

கண்ணுக்கு புரியாத
கதிர்வீச்சாய்
கலந்து நிற்கிறாய் என்னோடு. . .

காதலே ! நீ யார் என்று தெரியாமல்,
கவி பாடுகிறேன். . .
உன்னைச் சேராமலே,
பிரிந்து தவிக்கிறேன். . .
காட்சிகள் இல்லாத கணவாய். . .
உருவம் இல்லாத நிழலாய். . .
ஆசைகளாய்,
ஏக்கங்களாய்................ஐயோ ! வார்த்தைகளும்
உன்னால் வஞ்சகம் செய்கிறதடி. . .

அத்தனைக்கும்,
ஆறுமுகனை பிராத்திக்கும். . .
எந்தன் உள்ளம். . .
இன்று உனைக் காண,
"உனக்கான" உள்ளம்
உன்னிடம் பிராத்திக்கிறது . . .பாவியடி நீ !
நண்பன் முருகன் நல்லவன்,
நாளை தமிழ் சொன்னால். . .சரி ஆகிவிடுவான். . .


Friday, 18 February 2011

ஏனோ. . .குவியமில்லா ஒரு காட்சிப் பேழை !


ஏனோ. . .குவியமில்லா ஒரு காட்சிப் பேழை !

உணர்வுகளை வெளிபடுத்தும் சூக்க்ஷும கவிதைகளை யார் எழுதினாலும் ஒரு வித ஈர்ப்பு இருக்கும். . .அவரிடம் தமிழ்ச் செழுமை மேலோங்கும் பொழுது, அது நம்மை மோன நிலைமைக்கு இட்டு செல்லும். . .அவர் மேலும் படித்தவராக (இயற்க்கை அறிவியல்) இருந்தால் அங்கு இருந்து வரும் வரிகள். . .நம்மை மோனத்தன்மையில் ஆனந்த பிரவாகத்துக்கு உட்படுத்துகிறது, லயிக்க செய்கிறது. . .இந்த பாடல். . .! அந்த ரகம்.

நியாபகம் இல்லை, உணர்வில் இருக்கிறது . . .தபு ஷங்கரின் கவிதை நூல் அது. . .இயற்கை அறிவியலை காதலோடு கலந்து மயங்க செய்து இருப்பார். . .வெகு நாட்கள் கழித்து மதன்கார்கியின் வரிகள். . .! வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள். . .

Wednesday, 26 January 2011




மீன்கள் காற்றில்,
நீந்துவதைக் கண்டேன்
மிளிரும் உந்தன் கண்களாய். . .

மாலைக் கதிரவனை
மண்ணில் கண்டேன்,
மங்கை உன் நிறமாய். . .

பொன்னிற மேனி,
பொலிவுறு பார்வை,
விண்ணையும் வீழ்த்தும். . . !
விளக்கம் இன்னும் சொல்லவோ
நான் வீழ்ந்ததன் காரணம் ?

Sunday, 16 January 2011

கவிதை. . .

கவிதை,
நித்திரை இல்லாத கனவுகளின்
நிழல் வடிவம். . .

Saturday, 11 December 2010

பூக்கள் மட்டும் அல்ல. . .

Add Image




பழுப்பு வெள்ளை
பட்டு ஜரிகை. . .

'8'-ஆன இடுப்பை எடுத்துக் காட்டும்
சேலை மடிப்பு. . .

எவரையும் வீழ்த்தும்
விழி எனும் கனைக்கு
வில்லான புருவங்கள். . .

இருளின் வண்ணம் எதுவென கேட்டால்
இது தான் என எடுத்துஇயம்பும்,
நெய் பூசிய கூந்தல். . .

நித்தமும் நிலைகுலையச் செய்யும்
விந்தையான கவர்ச்சி. . .


இப்படி இறகுகள் ஏராளம் கொண்ட
வண்ணமயமான பறவைகளின் கூட்டம்
காருன்யாவில்,
திருவோனக் கோலமிடுவதை கண்டேன். . .
உதிர்ந்தது பூக்கள் மட்டும் அல்ல. . .
நாங்களும் தான். . .


Tuesday, 30 November 2010

இன்னும் எத்தனை இரவுகள். . ?

இன்னும் எத்தனை இரவுகள். . ?
என் விழிகளில்,
விழக்குகள் எரிந்து கொண்டிருக்கும். . .
மின்சாரத்தை மிச்ச படுத்த விரும்புகிறேன். . .
அது,
என் தேசத்திற்கும்,தேகத்திற்கும்,
தற்போதைய தேவை. . .

Friday, 12 November 2010

நீ எங்கு இருக்கிறாய் ?




காற்றும் என்னைச் சாடுகிறது,

காலம் என்னை தூற்றுகிறது

ஏன் எங்களை இழுத்தடிக்கிறாய் என்று. . .

இயற்கையே. . ! இப்படி பழிக்கிறது

இதில்,

நண்பர்களிடத்தில் நான் எப்படி குறை காண்பது. . ?

காரணம். . ? சொல்லபடுகிறது

காலத்தில் எனக்கு

காதல் வரவில்லையாம். . .

நகைக்கிறேன்,

மீண்டும் நகைக்கிறேன். . .

தனிமையின் தாராளம்

என்னைச் சூழும் தருணங்களில்

காற்றும் என்னைச் சாடுகிறது,

காலம் என்னை தூற்றுகிறது. . .


நீ எங்கு இருக்கிறாய் ?

மழையின் சாரல்,

தென்றலின் தழுவல்,

இலைகளின் நிறம்

இவைகள், நீ இன்றி

உணர்வு தர மறுக்கின்றன. . .



உன் கண்களை மறைக்கும்,

முகப்பு கூந்தலை தளர்த்தி

முத்தம் கொடுக்க,

என் உதடுகள் தவம் கிடக்கிறது. . .

உன் கைபிடித்து

நான் நடக்கும் தருனங்களுக்காக

என் கற்பனை பூங்காக்களில், மரங்கள்

மகரந்த பூக்களை உதிர்க்காமல் காத்திருக்கிறது. . .

நீ எங்கு இருக்கிறாய் ?

தெரியாது

நீ எப்படி இருப்பாய் ?

சத்தியமாக தெரியாது. . .

ஆனால் !

உன்னை நம்புகிறேன். . .

நீ எனக்கான இறைவனின் கருணை. . .

காற்றை பாடவை,

காலத்தை போற்றவை. . .

- கண்ணப்பன்