Saturday, 11 December 2010

பூக்கள் மட்டும் அல்ல. . .

Add Image




பழுப்பு வெள்ளை
பட்டு ஜரிகை. . .

'8'-ஆன இடுப்பை எடுத்துக் காட்டும்
சேலை மடிப்பு. . .

எவரையும் வீழ்த்தும்
விழி எனும் கனைக்கு
வில்லான புருவங்கள். . .

இருளின் வண்ணம் எதுவென கேட்டால்
இது தான் என எடுத்துஇயம்பும்,
நெய் பூசிய கூந்தல். . .

நித்தமும் நிலைகுலையச் செய்யும்
விந்தையான கவர்ச்சி. . .


இப்படி இறகுகள் ஏராளம் கொண்ட
வண்ணமயமான பறவைகளின் கூட்டம்
காருன்யாவில்,
திருவோனக் கோலமிடுவதை கண்டேன். . .
உதிர்ந்தது பூக்கள் மட்டும் அல்ல. . .
நாங்களும் தான். . .


No comments: