காற்றும் என்னைச் சாடுகிறது,
காலம் என்னை தூற்றுகிறது
ஏன் எங்களை இழுத்தடிக்கிறாய் என்று. . .
இயற்கையே. . ! இப்படி பழிக்கிறது
இதில்,
நண்பர்களிடத்தில் நான் எப்படி குறை காண்பது. . ?
காரணம். . ? சொல்லபடுகிறது
காலத்தில் எனக்கு
காதல் வரவில்லையாம். . .
நகைக்கிறேன்,
மீண்டும் நகைக்கிறேன். . .
தனிமையின் தாராளம்
என்னைச் சூழும் தருணங்களில்
காற்றும் என்னைச் சாடுகிறது,
காலம் என்னை தூற்றுகிறது. . .
நீ எங்கு இருக்கிறாய் ?
மழையின் சாரல்,
தென்றலின் தழுவல்,
இலைகளின் நிறம்
இவைகள், நீ இன்றி
உணர்வு தர மறுக்கின்றன. . .
உன் கண்களை மறைக்கும்,
முகப்பு கூந்தலை தளர்த்தி
முத்தம் கொடுக்க,
என் உதடுகள் தவம் கிடக்கிறது. . .
உன் கைபிடித்து
நான் நடக்கும் தருனங்களுக்காக
என் கற்பனை பூங்காக்களில், மரங்கள்
மகரந்த பூக்களை உதிர்க்காமல் காத்திருக்கிறது. . .
நீ எங்கு இருக்கிறாய் ?
தெரியாது
நீ எப்படி இருப்பாய் ?
சத்தியமாக தெரியாது. . .
ஆனால் !
உன்னை நம்புகிறேன். . .
நீ எனக்கான இறைவனின் கருணை. . .
காற்றை பாடவை,
காலத்தை போற்றவை. . .
- கண்ணப்பன்
1 comment:
Nice one... would like to follow u..
wh is the option????
Plz add that option..
Post a Comment