Thursday, 12 August 2010

ஏக்கம் நிறைந்த காலம். . .


ஏக்கம் நிறைந்த காலம்,
தூக்கம் வராத கோலம். . .

எதோ ஒரு விதமான இறுக்கம்,
காரணம் தேடினால்,
கவிதையும்,கண்ணீரும் கலைகட்டுகிறது. . .
சோகமும் ,மோகமும் சூடுபிடிக்கிறது. . .
காதல் என்று யாரும் கதை சொல்லிவிட வேண்டாம். . .
அதற்க்கு தருணம் தற்போது இல்லை. . .
இது,
எதிர்காலத்தின் எதிர்பார்ப்பு,
நிகழ்காலத்தின் நேரக்களிப்பு. . .

வாய்ப்புகளுக்காக,
வானம் பார்த்திருக்கிறேன். . .
கால்கள் இரண்டிற்கும்,
காவடிச் சிந்து தெரிந்திருந்தும். . !

அழுத்தத்தை போக்கவே, என்னத்தை
எழுத்தாக்குகிறேன். . .
கவிஞன் என்ற கவுரம் காண அல்ல. . .

மாற்றத்தை எதிர்பார்த்திருக்கிறேன். . .
மாயோன் மருகன்,
மனமிரங்கும் திசை பார்த்திருக்கிறேன். . .

ஏக்கம் நிரந்த காலம்,
தூக்கம் வராத கோலம். . .

No comments: