காதலிக்க வேண்டும் . . .
காமத்தின் சாரத்திற்காக அல்ல,
கவிதையின் ஈரத்திற்காக. . .
காதலிக்க வேண்டும். . .
கன்னித் தமிழில்,
கவிதைகளை பின்னி எடுக்கும்
வித்தையின் வித்திற்காக . .
அதில் விளைந்திடும் முத்திற்காக. . .
காதலிக்க வேண்டும். . .
மாற்றத்தின் மாட்சிமைக்கு,
அடங்காமல்,
மகிழ்ந்தாடும் கவிதைகளுக்கு,
கர்த்தா. . .
இந்த காதல் தானே,
அதன் ஆளுமைக்காக. . .
காதலிக்க வேண்டும். . .
வளம் பெற்ற காதலில் தானே,
கவிதைகள் பலம் பெறுகின்றன. . .
என் கவிதைகளின் எழுச்சிக்காக . . .
காதலிக்க வேண்டும் . . .
காதலிக்க வேண்டும். . .
No comments:
Post a Comment